உக்ரைனின் ஸ்மின்யி தீவில் ரஷ்யத் தாக்குதலில் மரணித்த 13 வீரர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விருதளித்துள்ளது.
ரஷ்யப் போர்ப்படையிடம் சரணடையாமல் ‘சாவதே மேல்’ என்று கருதிய அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.
அவர்கள் கருங்கடலில் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறிக்கைகள் சுட்டின. இவர்களைச் சரணடையும்படி ரஷ்யப் போர்க்கப்பல்கள் வலியுறுத்தியிருக்கின்றன. அப்படிச் செய்ய மறுத்தால் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவை அச்சுறுத்தியிருக்கின்றன.
அந்த வீரர்கள் அதற்கு அடிபணியவில்லை. உயிரைப் பணயம் வைத்து ஸ்மின்யி தீவை அவர்கள் தற்காத்தனர்.
அவர்களது மரணத்தை உறுதிசெய்த உக்ரைனிய ஜனாதிபதி அவர்களது துணிச்சலைப் பாராட்டி அவர்களுக்கு ‘உக்ரைனின் நாயகர்கள்’ என்ற விருதை வழங்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1