கைதான 22 தமிழக மீனவர்களிற்கு விளக்கமறியல்!

Date:

காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

காரைநகரை அண்டிய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு ரோலர்களில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டு மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் படகிலிருந்த மீனவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பிலும் மலேரியா தொற்று தொடர்பிலும் சுகாதாரத்துறை யினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த 22 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்