27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீது உக்கிர தாக்குதல்: விமானப்படை, கடற்படை கட்டமைப்பை செயலிழக்கச் செய்துவிட்டதாக ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் விமான தளங்களில் உள்கட்டமைப்பை அழித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அத்துடன் உக்ரைனிய கடற்படையையும் செயலிழக்க வைத்துள்ளதாகவும், கருங்கடல் மற்றும் அசோவ் கடலுக்கான அணுகல் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

உக்ரைனிய விமானத் தளங்களில் உள்ள இராணுவ உள்கட்டமைப்புகளைத் தாக்கி உக்ரைனின் வான் பாதுகாப்பை சீரழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

உக்ரைனில் தனது விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான செய்திகளை அமைச்சகம் மறுத்துள்ளது. உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் ஐந்து ரஷ்ய விமானங்களும் ஒரு ஹெலிகொப்டரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனின் இராணுவம் முன்னதாக கூறியது.

 

இன்று வியாழக்கிழமை, உக்ரைனில் ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ ஆரம்பிக்கப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து உக்ரைன் முற்றுகைக்கு உட்பட்டது. பெலாரஸின் வடக்கு எல்லையில் இருந்து ரஷ்ய-பெலோருஷியன் கூட்டுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.யுத்த டாங்கிகள் உக்ரைனிற்குள் நுழைந்தன. கிழக்கு மற்றும் தெற்கிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலைநகர் கியேவ்வும் தாக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சு கூறியது.

ஐந்து ரஷ்ய ஜெட் விமானங்களும் ஒரு ஹெலிகொப்டரும் நாட்டின் கிழக்குப் பகுதியில் கார்கிவ் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ நிலையங்களை மட்டுமே தாக்குவதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து வருவதாகவும் ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் ஏற்கனவே பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் எல்லைப் படை வடக்கில் உள்ள அவர்களின் நிலைகள் ரஷ்ய மற்றும் பெலோருசியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள. ரஷ்யா தனியாக செயல்படவில்லை. அனைத்து பக்கங்களிலிருந்தும் தாக்குகிறது.

பெலாரஸில் இருந்து ரஷ்யப் படைகைள் உக்ரைனுக்குள் நுழைவதைக் கண்டதாக CNN தெரிவித்துள்ளது.

கியேவில் இருந்து 120 மைல் தொலைவில் உள்ள பெலாரஸ் எல்லையிலும் ரஷ்யா படையெடுத்ததை உக்ரேனிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

உக்ரைன் எல்லையை ரஷ்யா மற்றும் பெலாரஸ் இராணுவ வீரர்கள் தாக்கியதாகவும், இது லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் சைட்டோமிர் பகுதிகளில்  தொடர்வதாகவும் தெரிவித்தார்.

கிரிமியாவில் இருந்தும் உக்ரைன் தாக்கப்பட்டதாகவும் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

‘எதிரி நாசவேலை மற்றும் உளவு குழுக்களின் பணிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என பேச்சாளர் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி வியாழன் அதிகாலை உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்தபோது, ​​உக்ரைனிய வீரர்கள் ‘தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று கூறினார்.

உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தலுடன் ரஷ்யா இருக்க முடியாது என்றும், ரஷ்ய மற்றும் உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல்கள் தவிர்க்க முடியாதது என்றும் புடின் கூறினார்.

உக்ரைனின் ஜனாதிபதி, வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வியாழக்கிழமை அதிகாலையில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.  அவர் நாட்டு  மக்களுக்கு வெளியிட்ட சுருக்கமான வீடியோ செய்தியில், மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் வலுவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜோ பிடனுடன் தான் பேசியதாக அவர் கூறினார்.

‘நாங்கள் வேலை செய்கின்றோம். ராணுவம் செயல்படுகிறது,” என்றார்.

“ஒரு நிமிடத்திற்கு முன்பு நான் ஜனாதிபதி பிடனுடன் உரையாடினேன். அமெரிக்கா ஏற்கனவே சர்வதேச ஆதரவை ஒன்றிணைக்கத் தொடங்கியுள்ளது. இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்க வேண்டும். முடிந்தால் வீட்டிலேயே இருங்கள். நாங்கள் வேலை செய்கின்றோம். ராணுவம் செயல்படுகிறது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை முழுவதுமாக செயல்பட்டு வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“பதற்றம் இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் உக்ரைன் என்பதால் அனைவரையும் வெல்வோம்” என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

நியூயோர்க்கில் பெரும் தீ – 7 பேர் காயம், உயிர்காக்கும் போராட்டத்தில் 200 வீரர்கள்

east tamil

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

Leave a Comment