29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ஆரம்பித்தது போர்; ‘யாரும் தலையிட முயன்றால் கடும் விளைவை சந்திப்பீர்கள்’: ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்

கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறிய புடின், உக்ரைன்இ ராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய “ஆட்சிக்கு” உள்ளது என்று புடின் கூறினார்.

ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் “அவர்கள் இதுவரை கண்டிராத விளைவுகளை” ஏற்படுத்தும் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரித்தார்.

இதையும் படியுங்கள்

3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்!

Pagetamil

குர்ஸ்க் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதை பகிரங்கப்படுத்திய வடகொரியா

Pagetamil

ஈரான் துறைமுகத்தில் பெரும் வெடிவிபத்து!

Pagetamil

டான் பிரியசாத் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Pagetamil

‘பாகிஸ்தானுக்குள் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால்…’: இந்தியாவின் அடிவயிற்றை கலங்க செய்யும் பாகிஸ்தானின் எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment