26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம்: ‘கல்யாண ராமன்’ கைது!

48 ஆண்டுகளில் ஏழு மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ புவனேஸ்வரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நபர் தப்பிச் செல்வதற்கு முன்னதாக இந்த பேண்களிடமிருந்து பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்ட நபர், குற்றச்சாட்டை மறுத்தார்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் 1982இல் முதல் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு 2002இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கும் முதல் இரண்டு மனைவிகளுக்கும் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

2002 மற்றும் 2020 க்கு இடையில், அவர் மேட்ரிமோனியல் வலைத்தளங்கள் மூலம்  நடுத்தர வயதுடைய விவாகரத்தான பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி மற்ற மனைவிகளுக்குத் தெரியாமல் அவர்களை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு அவர்களிடமிருந்து பணம், நகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றியுள்ளார்.

இதுவரை டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள பெண்களை ஏமாற்றி 14 திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்.

கடைசியாக டெல்லியில் பள்ளி ஆசிரியையாக இருந்த ஒருவரை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு அவருடன் ஒடிசா தலைநகரில் தங்கி இருந்துள்ளார். அவரின் முந்தைய திருமணங்களை பற்றி தெரிந்து கொண்ட அவரது கடைசி மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

அவர் வாடகை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நடுத்தர வயதுடைய விவாகரத்தான பெண்களையே குறிவைத்துள்ளார். பெண்களை திருமணம் செய்து, நகை, பணத்தை பெற்றுக்கொண்ட பின், அவர்களை கைவிட்டுள்ளார் .

அவர் ஒரு சுகாதார சேவை உழியராக தன்னை காண்பித்துள்ளார். சட்டத்துறை, மருத்துவர்கள் மற்றும் படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஒரு துணை இராணுவ அதிகாரியான ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்..

கைதானவரிடம் இருந்து 11 ஏடிஎம் அட்டைகள், 4 ஆதார் அட்டைகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஐதராபாத் மற்றும் எர்ணாகுளத்தில் வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றியது மற்றும் அடமானம் மோசடி செய்ததற்காக அவர் இதற்கு முன்பு இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment