லிந்துலை உணவகத்தில் தீ: முதியவர் உயிரிழப்பு!

Date:

இன்று (14) காலை 8 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லிந்துலை லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மருதைவீரன் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் லிந்துலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாலை உணவகத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது உணவகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், உணவு சமைத்த போது தீயினால் அவர் உயிரிழந்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்