இன்றைய வானிலை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…

யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மன்னார் – பி.ப. 2.00மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மட்டக்களப்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அனுராதபுரம் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்