களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 1 கிலோ 064 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார்.
இது பிரபல போதைப்பொருள் வியாபாரி அசங்கவிற்கு சொந்தமான போதைப்பொருள் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்காக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (7) பிற்பகல் சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் குழு அவரை கைது செய்துள்ளது.
சந்தேகநபர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது கணவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.




