நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 70,917 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
59,202 ஃபைசர் பூஸ்டர் டோஸ்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
599 நபர்கள் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர், 944 பேர் இரண்டாவது சினோபார்ம் டோஸை பெற்றனர்.
5,313 நபர்கள் முதல் ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றனர், 4,859 நபர்கள் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.
5,841,518 நபர்கள் இதுவரை மூன்று தடுப்பூசி டோஸையும் பெற்றுள்ளனர்.




