சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Date:

பல்வேறு காரணங்களுக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை உரிய ஒழுக்காற்று விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான அதிகாரிகளை தொடர்ந்து பணியில் தக்கவைப்பது திணைக்களத்தின் நற்பெயருக்கு பாதகமாக அமையும் என்பதனால் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சேவையை நிறுத்த அல்லது கடுமையான தண்டனைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதை அல்லது கைதிகளை தாக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து அத்தியட்சகர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0112678600 என்ற இலக்கத்தின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் பெயர் வெளியிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்