சீனாவில் கட்டுப்பாட்டை தளர்த்தினால் ஆண்டுக்கு 2 மில்லியன் இறப்பு ஏற்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

Date:

சீனாவில் COVID-19 பரவலை கட்டுப்படுத்த அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் வரை தொற்றினால் இறக்கக்கூடும் என்று சீன ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் எந்தவிதமான COVID-19 தொற்றும் ஏற்படக்கூடாது என்ற ‘சீரேர் கொள்கையை உலக அளவில் பலரும் குறைகூறியுள்ளனர்.

இருப்பினும் சீன அறிவியல் ஆய்வாளர்களும் பொதுச் சுகாதார நிபுணர்களும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கட்டிக்காப்பது முக்கியம் என்று வலியுறுத்துகின்றனர்.

அவ்வாறு செய்யாவிடில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்றும் அதிவேகத்தில் பரவக்கூடிய ஓமைக்ரோன் வைரஸ் நிலைமையை மோசமாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

வைரஸ் பரவலுக்கு முந்திய காலத்தில் இருக்கும் வழக்கநிலைக்கு சீனா மாறினால் அங்கு வைரஸ் பரவாத இடங்களிலும் சுமார் 234 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகலாம் என்று ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர்.

அதனால் 2 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதற்கு மாறாக தொடர்ந்து புதிய தடுப்புமருந்துகளை உருவாக்கி அதன்மூலம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது சிறந்த திட்டம் என்று சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்