2022 உலக உச்சி மாநாட்டில் (கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான உச்சி மாநாடு) சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தென்கொரியாவின் சியோலுக்கு செல்லவுள்ளார்.
157 நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், கொரிய தீபகற்பத்தின் அமைதியான நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றுவார்கள்.
சியோலில் இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மில்லியன் கணக்கான பங்கேற்பாளர்கள் மெய்நிகர் ஊடகங்கள் மூலம் கலந்துகொள்வார்கள்.
157 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிற்கு, ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்தார்.
இன்று தென்கொரியா செல்லும் முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.




