நடிகை அபிராமியை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். கமலஹாசனுடன் இவர் நடித்த விருமாண்டி திரைப்படம் சக்கை போடு போட்டது.
இந்த படத்தில் நடித்தபோது கமல்ஹாசன் – அபிராமி ஜோடியின் ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.இவர்கள் பற்றிய கிசுகிசுக்களும் கிளம்பியது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிதும் தலைகாட்டாத அபிராமி ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
அதன்பிறகு தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அபிராமி தற்போது தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் நடிகைகள் தங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி பொழுதைக் கழிப்பார்கள். இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு விளையாட்டின் மூலம் பொழுதை கழித்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் ஒரு விளையாட்டு ஒன்றில் ஆம் இல்லை என பதில் அளிக்க வேண்டும். அந்த விளையாட்டில் அபிராமிக்கு ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது உங்க எக்ஸ்க்கு முத்தம் கொடுத்தீர்களா என்ற கேள்வி அது.
அதற்கு இல்லை என்று பதில் கூறி அவர் சிறிது வெட்கமும் பட்டார்.
அபிராமி நடிப்பில் அடுத்தடுத்து மலையாளத்தில் சில படங்கள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.




