திரியாயில் சடலம் மீட்பு!

Date:

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரிியாய் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (06) காலை பொதுமக்களினால் இனங்காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குச்சவெளி போலீசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை உக்வத்தை விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கொலையா அல்லது இயற்கை மரணம் என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ரவ்பீக் பாயிஸ்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்