27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

கைப்பற்றப்பட்ட 135 இந்திய படகுகள் ஏலத்தில் விற்பனை!

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதன்போது 8 8அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 1,350,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள்
ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!