முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சுதந்திர தினத்தன்று பூரண சுதந்திரத்தைப் பெறுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்கும் மனிதாபிமான தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு கலைஞனாக கலைத்துறைக்கு பெரும் சேவையை ஆற்றி வந்த அவர், அரசியல் ரீதியாகவும் இந்த நாட்டுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.அத்தகைய மனிதாபிமான தலைவரான ரஞ்சன் ராமநாயக்க சுதந்திர தினத்தில் பூரண சுதந்திரம் பெறுவார் என நம்புகின்றோம்.
மனிதாபிமானத்திற்கு முழு முன்னுரிமை அளித்து மனிதாபிமான தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.




