முட்டைத் தாக்குதல் பற்றி ஜேவிபி முறைப்பாடு!

Date:

கடந்த ஞாயிற்றுக்கிழமை கலகெடிஹேனவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட மாநாட்டின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பல் ஒன்று மாநாட்டை தாக்கி கூட்டத்தை நாசப்படுத்த முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் தற்போது காவலில் இருப்பதாகவும், அவர்கள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், அவர்கள் அரசியல் நலன்களுக்காக கூட்டத்தை நாசப்படுத்த முயன்றனர் என்பது தெளிவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்படி, கைது செய்யப்பட்ட இருவரின் தகவல்களின்படி, பொதுப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரிற்கு தெரிந்து மற்றும் ஆதரவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில்...

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்