கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,492 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
14 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்தனர்.
12 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
பலியான பெண்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதேவேளை, நாட்டில் இன்று 1,156 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 613,478 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வந்த ஐவரும் இன்று பதிவான தொற்றாளர்களில் அடங்குகின்றனர்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது 18,666 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று முன்னதாக, தொற்றிலிருந்து குணமடைந்த 471 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 579,320 ஆக உயர்ந்துள்ளது.




