இலங்கையில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,473 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில், 32 பேரும் ஜனவரி 31 ஆம் திகதி நேற்று உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
15 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்தனர்.
12 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
3 ஆண்களும் 6 பெண்களும் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.




