அத்துமீறும் இந்திய படகுகளை பிடித்து வாருங்கள்; இந்திய படகுகளை இடித்து மூழ்கடிக்கும் திட்டமும் உள்ளது: அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு (video)

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றி வருமாறு, மீனவர்களிடம் தெரிவித்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அத்துடன், இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் பெரிய இழுவைப்படகுகளை வடக்கு மீனவர்களிடம் வழங்கி, இவற்றின் மூலம், அத்துமீறும் இந்திய படகுகளை மோதி மூழ்கடிக்கும் திட்டமும் தன்னிடமுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் நடமத்தியில் இதனை தெரிவித்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகைப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி பிரதான வீதியில் அமர்ந்திருந்த மீனவர்கள்,எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா,வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்,எமது கடல் எமக்கு வேண்டும்,கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

சிலமணி நேரங்களின் பின்னர் அங்கு வருகைதந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகையை தடுப்பதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமாக விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்திய பின்னரும் சில மீனவர்கள் தொடர் கேள்வியெழுப்பிக் கொண்டிருந்ததால் அதிருப்திடைந்த அமைச்சர், தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாகவும், உங்கள் முடிவின்படி செயற்படுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இதனையடுத்து உயிரிழந்த இருவரின் இறுதிச் சடங்கையும் மேற்கொள்ளும் பொருட்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் நீதி கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் போராடுவோமென தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருந்ததுடன் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்