வவுனியா, தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 27 ஆம் திகதி வவுனியா, குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வராத நிலையில், அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் நிரேஸ் (30) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0778013692, 0771014446 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறும் உறவினர்கள் கோரியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.