24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கையர்: மேலும் பல தகவல்கள்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையரான இந்திக குணதிலக விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவன், மனைவிக்கிடையிலான குடும்ப தகராறின் இறுதி விளைவே இந்த அனர்த்தம் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது பிள்ளைகளை கொன்று விட்டு, இந்திக குணவர்த்தன தற்கொலை செய்து கொண்டார்.

தென்கிழக்கு பெர்த்தின் புறநகர் பகுதியான ஹண்டிங்டேலில் உள்ள எசின்டன் தெருவில் உள்ள அவர்களது வீட்டில் 4 வயது மகளையும், 6 வயது மகனையும் கொலை செய்த பின்னர், வீட்டு கேராஜில் இந்திக தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்திக குணவர்த்தன, அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்திக்க சிறுவயதில் ரோயல் கல்லூரியில் படிக்கும் போது கூடைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். அவர் மேடைப் பேச்சு, பாடும் திறனையும் பெற்றிருந்தார்.

அவரது நட்பான அணுகுமுறையால், அவுஸ்திரேலிய யுவதி காதலில் விழுந்து, இருவரும் 2016 ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயார் இருவரும் சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமணத்தின் போது இந்திகாவுக்கு 34 வயது. இந்திக, திருமணத்தின் காரணமாக அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார்.

இந்திக தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருந்ததாக உறவினர்களும், நண்பர்களும்  தெரிவித்தனர்.

ஆனால், கடந்த 2020-21 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திகாவை திருமணம் செய்ய ஆரம்பம் முதலே தயக்கம் காட்டி வந்த மனைவியின் தாய் இவர்களது குடும்பத்தில் சில பிரச்சினைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தப்பிப்பது சிரமமாக உள்ளதாக, இந்திக தனது நண்பர்களிடம் சில முறை கூறியிருக்கிறார்.

இந்திகவின் மனைவியும் சில பிரச்சனைகளின் போது, தாயாருடன் கலந்தாலேசித்தே செயற்பட்டார். இதன் காரணமாக பிரச்சனைகள் எழுந்த போது, மனைவியும் தாயாரும் ஒரு பக்கமாகவும், இந்திய மறுபக்கமாகவும் இருந்து தர்க்கப்பட்டதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான சண்டைகளின் போது, தனது மாமியார் தன் மகளை வெள்ளையல்லாதவருக்கு திருமணம் செய்து கொடுக்க நேர்ந்ததை நினைத்து வருந்துவதாக குத்திக் காண்பிப்பதாக இந்திக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த மோதல்களை தொடர்ந்து, தன் மகளிற்கு வேறொரு – அவுஸ்திரேலிய இணையை  தேடுவதில் தாயும் ஆர்வமாக இருந்தார்.

இந்த பிரச்சனைகள் சேர்ந்து இந்திய கடுமையான  மன உளைச்சலுக்கு ஆளானார். கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையில், மனைவியின் தாயும் அவரது கணவரும், ‘மனநலம் குன்றிய கணவருடன் வாழ்வது சிரமம்’ என காரணங்களை கூறி, இந்திகாவை விட்டு வெளியேறுவதற்கான சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வந்தனர்.

இந்திக சிலமுறை வன்முறை மனநிலையுடன் மனைவியை அணுகியதாக மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மனைவி நீதிமன்றத்தை அணுகி, கணவரிடமிருந்து பாதுகாப்பாக பிரிந்திருக்கும் உத்தரவையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திகவின் நண்பர்கள் வேறு ஒரு கதையை கூறியுள்ளனர். ‘இந்திக தன் குழந்தைகளையும் மனைவியையும் மிகவும் நேசித்தார் ஆனால் மனைவி அந்த குழந்தைகளை பின்னர் கவனிக்கவில்லை. மற்றவர்களுக்கு அவர் முக்கியம் கொடுத்தளவிற்கு பிள்ளைகளிற்கு முக்கியம் கொடுக்கவில்லை. அதனால் குழந்தைகளின் மீது நான் மட்டும்தான் அக்கறை காட்டினேன்’ என இந்திக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்திக்காவின் மனைவியும் தாயாரும் சட்டத்துறையில் ஈடுபட்டதால் இந்திக்கவின் மனைவியின் பிரிவை விரைவுபடுத்துவது அவர்களுக்கு இலகுவாக அமைந்தது.

மனச்சோர்வு அதிகரித்த போது, அதுவரை இணையத்தில் சுறுசுறுப்பாக இருந்த இந்திக திடீரென ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார். கடந்த டிசம்பரில் ஃபேஸ்புக்கிற்குத் திரும்பிய அவர், கடந்த காலத்திலிருந்து விலகியதற்காக மன்னிப்புக் கேட்டு பின்னர் தனது மனக் குழப்பத்தைப் பற்றி பேசினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவின்படி பிள்ளைகளும் தாயாரும் சந்திக்கவிருந்தனர். எனினும், பிள்ளைகள் வராததால், தாயார் அந்த வசிப்பிடத்திற்கு வந்த போது இந்த அனர்த்தம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த பின்னணியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு பிள்ளைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment