நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் மற்றும் 5 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், களமச்சேரி குற்றப்பிரிவு அலுவலகத்தில் திலீப் உள்ளிட்டோர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவரிடம் ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, திலீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் 23, 24, 25ஆம் திகதிகளில் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரணை நடத்த அனுமதியளித்தார்.
இந்த வழக்கில் உண்மை வெளிவரும் என்றும், உண்மையின் படி நடப்பேன் என்றும் ஸ்ரீஜித் கூறினார்.
திலீபனின் ஒத்துழைப்பும் ஒத்துழையாமையும் ஆதாரமாக மாறிவிடும். நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடந்து வருகிறது. திலீப் ஒத்துழைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என, ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் கூறினார்.
‘திலீப் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக, எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதுபற்றி இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. வழக்கில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார் ஸ்ரீஜித்.