நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
யாழ்ப்பாணம் – சீரான வானிலை.
மன்னார் – சீரான வானிலை.
மட்டக்களப்பு – சீரான வானிலை.
திருகோணமலை – சீரான வானிலை.
கண்டி – சீரான வானிலை.
நுவரெலியா – சீரான வானிலை.
இரத்தினபுரி – சீரான வானிலை.
அனுராதபுரம் – சீரான வானிலை.
கொழும்பு – சீரான வானிலை.
காலி – சீரான வானிலை.
-வளிமண்டலவியல் திணைக்களம்-



