ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்: நாமல்

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ஷ, உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ, அரசாங்கக் கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்களின் கூட்டத்திலோ மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.

இதனை அரசியல் தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனிநபர்கள் ஆட்சி செய்வதற்காக பொதுமக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறிய அமைச்சர் நாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுமா என்பதை மக்கள் அறிவார்கள்.
அரசாங்க அரசியல்வாதிகள் என்ற வகையில், கருத்துக்களைக் கூற அவர்களுக்கு உரிமை உண்டு என்றார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கையில், இந்தத் தீர்மானம் தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒன்றரை வருடங்களாக நட்டத்தில் இயங்கும் கரைச்சி  தெற்கு பல நோக்குகூட்டுறவுச் சங்கம்

கிளிநொச்சியில் முக்கியமான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாககாணப்படுகின்ற கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்...

சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17)...

ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டதால்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்