பேருந்தில் பயணித்த 2 மாணவிகளின் தலைமுடியை வெட்டியவர் கைது!

Date:

பண்டாரவளை, ஹீலோயா பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தைக்கு தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஊவா பரணகம பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த நபர், இதற்கு முன்னரும் பல பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களின் முடிகளை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு சொந்தமான பையில் இருந்து பல முடி எச்சங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் திருமணமானவர். அவர் தனது ஆர்வத்துக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்