இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில், 260 கிலோகிராம் ஏலக்காயை திருவாரூர் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் கோரையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்த ஏலக்காயை நேற்று (18) அதிகாலை 2 மணிக்கு முத்துப்பேட்டை பொலிசார் கைப்பற்றினர்.
9 மூட்டைகளில் 260 கிலோ ஏலக்காயையும், படகையும், படகில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கைப்பற்றிய பொலிசார், அதன் உரிமையாளரான நைனா முகமதுவையும் கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1