பசுபிக் நாடான டொங்காவை சுனாமி தாக்கியுள்ளது.
கடலுக்கு அடியிலுள்ள ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலை வெடித்ததையடுத்து, சுனாமி தாக்கியுள்ளது.
அத்துடன், நோர்த் தீவு, சாதம் தீவுகள், பிஜி மற்றும் அமெரிக்கன் சமோவா ஆகியவற்றிற்கும் கடல்சார் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன
நேற்று, டொங்கா தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் மேடான பகுதிகளிற்கு அனுப்பப்பட்டனர். இன்று சுனாமி அலைகள் நாட்டை தாக்கின.
நீருக்கடியில் எரிமலையான ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாயில் நேற்று வெடித்ததைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாம்பல், நீராவி மற்றும் வாயுவை 17 கிமீ வரை பரவியது.
This family were in church. They’d just finish having choir practice and the tsunami hit 😩❤️🇹🇴 pic.twitter.com/DLLFRJ9BAc
— KNOWKNEE (@JohnnyTeisi) January 15, 2022
அவுஸ்திரேலியாவிற்கு அண்மையிலுள்ள அந்த சிறிய தேசத்துடனான தகவல்தொடர்புகள் சிக்கலாக இருந்ததால், காயங்கள் அல்லது சேதத்தின் அளவு குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகள் கரை ஒதுங்குவதையும், வீடுகள் மற்றும் கட்டிடங்களைச் சுற்றி சுழன்று கொண்டிருப்பதையும் காட்டுகிறது.
Mannnn my heart hurts for my people rn 😭🇹🇴🙏🏽 pic.twitter.com/QjzW5f1uAy
— Aki🌴🇹🇴 (@ahkee_fifita) January 15, 2022
டோங்காவின் தலைநகரான நுகுஅலோபாவில் தற்போது எரிமலை சாம்பல் மழை பெய்து வருகிறது.
Stay safe everyone 🇹🇴 pic.twitter.com/OhrrxJmXAW
— Dr Faka’iloatonga Taumoefolau (@sakakimoana) January 15, 2022
அனைத்து குடியிருப்பாளர்களையும் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.