UPDATE: வவுனியாவில் அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 12 பயணிகள் காயம்

Date:

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த விபத்துக்குள்ளான பேரூந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு அதிசொகுசு பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து சம்பவத்தில் பேரூந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்