24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைக்கலவரம்: முன்னாள் அத்தியட்சகர் எமில் ரஞ்சனிற்கு மரணதண்டனை!

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெலிக்கடை கைதிகள் பலரைக் கொன்ற வழக்கில் அவரை குற்றவாளியாக ஒருமனதாக அறிவித்தனர்.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எட்டு கைதிகளின் மரணம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் வசமிருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விசேட நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது பல கைதிகள் இறந்தனர், இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமா அதிபர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

Leave a Comment