மீண்டும் தயாராகும் முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல்?

Date:

முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தில் நடிகர் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.

‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்