டிப்பர் வாகன சில்லில் சிக்குண்டு வயோதிபர் உயிரிழப்பு

Date:

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் டிப்பர் வாகனத்திற்குள் சிக்குண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் (09) மாலை 6.00 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சாவுல் ஹமீட் (76) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது வீட்டுக்குப் பின்னாலுள்ள காணிக்குள் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றி வந்து அதனை பறிக்கும் போது குறித்த இடத்தை காண்பித்துள்ளார். இதேவேளை டிப்பர் பின்புறமாக வந்தபோது கால் டிப்பர் வாகன சில்லில் சிக்கி கீழே விழுந்து
டிப்பர் வாகனத்தின் டயருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன்
இறந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

–ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்