இணையவாசிகள் கழுவிஊற்றிய லண்டன் சுற்றுலாத்தலம் நிரந்தரமாக மூடப்படுகிறது!

Date:

லண்டனில் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக அண்மையில் திறக்கப்பட்ட சுற்றுலாத் தலமொன்று நிரந்தரமாக மூடப்படவுள்ளது.

Marble Arch மண் மேடு சென்ற ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இதன்மூலம், லண்டன் நகருக்கு அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என அரசு நம்பியது.

எனினும், நினைத்தது போல நடக்கவில்லை.அது மலைபோல் ஏதோ ஒன்று, அவமானம் என்று இணையவாசிகள் கேலி செய்தனர்,

அதைக் கட்டுவதற்கு 6 மில்லியன் பவுண்ஸ் செலவானது. அதற்கான செலவு 2 மில்லியன் பவுண்ட் என்று தொடக்கத்தில் கூறப்பட்டது.

அந்தத் திட்டத்திற்குப் பொறுப்பேற்றிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் நகரமன்றத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுளள்ளார்..

திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Marble Arch மண் மேட்டால் அந்த வட்டாரத்திற்கு வருகையளித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவியதாக அவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்