ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Date:

மியான்மரில் ஜனநாயக தலைவி ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை, அந்த நாட்டின் இராணுவத்தினால் நடத்தப்படும் நீதிமன்றம் விதித்துள்ளது.

குறைந்தது மூன்று குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

76 வயதான ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மீது சுமார் 12 குற்றச்சாட்டுக்களை இராணுவம் சுமத்தியுள்ளது. இவை அரசியல் நோக்கம் கொண்டவை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

உரிமம் பெறாத வோக்கி-டோக்கிகளை வைத்திருந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகளும், கொரோனா வைரஸ் தடைகளை மீறியதற்காக இரண்டு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆங் சான் சூகி ஒரு மூடிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

தன் மீீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் சூகி மறுத்துள்ளார்.

அவர் கடந்த மாதம் “தூண்டுதல்” மற்றும் கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் இராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்