கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெரும்போக பயிர்ச் செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விளைச்சல் மிக குறைவாகவே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது ஒரு ஏக்கர் வயலில் 12-15 வரையான மூட்டை நெல்லையே அறுவடை செய்ய முடிந்துள்ளது. இம்முறை இயற்கை எமக்கு கை கொடுத்துள்ள போதிலும் அரசாங்கத்தினால் இரசாயன உரம் வழங்கப்படாமையின் காரணமாகவே பெரும் போக செய்கையில் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த வருடம் ஒரு ஏக்கர் வயலில் 30- 40வரையான மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இம் முறை அரசாங்கத்தினால் கமநலசேவையின் ஊடாக வழங்கப்பட்ட சேதன உரம் மற்றும் திரவ உரம் என்பனவற்றையே பயன்படுத்தியதாகவும், அவற்றினால் எந்த பலனும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்தநிலை தொடருமாயின் பெரும்போக பயிர்செய்கையினை கைவிடுவதை விட வேறு வழியில்லையென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.