பிரதமர் மஹிந்த ராஜபக்ச – சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பல இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ மாணவர்களை சீனாவுக்குத் திரும்பச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாக பிரதமர் கூறினார்.

சுற்றுலா, முதலீடுகள், கோவிட்-19 நிவாரணம் மற்றும் கோவிட்-க்கு பிந்தைய தயார்நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் மேலும் வலுவடையும் என நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்