தொழில்நுட்பம்

வண்ணம் மாறும் கார் அறிமுகம்: BMW நிறுவனம் அசத்தல்!

ஜெர்மனியின் BMW நிறுவனம் உலகில் முதல்முறையாக வண்ணம் மாறும் காரை அறிமுகம் செய்துள்ளது.

BMW iX Flow எனும் காரில் நிறுவப்பட்ட மின்னணு மைத் தொழில்நுட்பம் வழி, அது சாத்தியமாகிறது.

வாடிக்கையாளர்கள் காரின் நிறத்தைச் செயலி வழி எளிதாக மாற்றியமைக்கமுடியும்.

காரின் வெளிப்புறத்தைச் சாம்பல் வண்ணத்திலும் வெள்ளையிலும் பல விதமாக மாற்றலாம். வரிக்குதிரையைப் போன்ற தோற்றத்தையும் உருவாக்க முடியும்.

வருங்காலத்தில், பொத்தானைக் கொண்டோ கை சைகை மூலமோ காரின் வண்ணங்களை மாற்றுவதற்கும் முயற்சி எடுக்கப்படும் என்று BMW தெரிவித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வெறும் ரூ.7999-க்கு Phone-ஆ! இனிமே Samsung, Redmi-லாம் எதுக்கு?

divya divya

5 நிமிடங்களில் சார்ஜாகும் பற்றரி

Pagetamil

சாம்சங் கேலக்ஸி புக், கேலக்ஸி புக் புரோ மடிக்கணினிகள் அறிமுகம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!