சீனாவுடன் நெருக்கமாகுவதை தடுக்க இலங்கைக்கு 1,000 கோடி டொலர் கடன்: இந்திய அரசிற்கு யோசனை சொன்னார் சுப்ரமணியன் சுவாமி!

Date:

சீனாவிற்கு இலங்கை நெருக்கமாவதைத் தவிர்க்க இலங்கை அரசிற்கு 1,000  கோடி அமெரிக்க டொலர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாவும் அந்நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக இலங்கைக்கு சீனா பெருமளவில், கடனை வழங்கி அந்நாட்டுப் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்தியும் வருகிறது.

இந்நிலையில் இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசிற்கு இந்திய அரசு ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பீல் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி ) கடனாக வழங்குவதற்கு முன்வர வேண்டும். வெளிவிவகாரக் கொள்கையில் பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மத்திய அரசு இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக் கூடாது.

இலங்கைக்கான கடனை உடனடியாக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப் பங்காளியை இந்தியாவால் பெற்றுக்கொள்ள முடியும். இல்லை என்றால் சீனாவிற்கு இலங்கை மிக நெருக்கமாவதைத் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்