Pagetamil
இலங்கை

இலங்கைக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படும் உஸ்பெகிஸ்தான் யுவதிகள்!

உஸ்பெகிஸ்தானில் இருந்து யுவதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஹோட்டல்கள், குழந்தைப் பராமரிப்பில் பணியாற்றலாமென அவர்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உஸ்பெக்கிஸ்தான் யுவதிகள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் விபச்சாரத்தில் கட்டாயமாக தள்ளப்படும் யுவதிகள், அங்கிருந்து தப்பித்து தங்குமிடம் அல்லது பாதுகாப்பான வீடுகளில்தங்கியிருக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள், அதற்குப் பதிலாக ஐ.நா. ஏஜென்சி, தனியார் தங்குமிடம் அல்லது நம்பிக்கை சார்ந்த தங்குமிடங்களால் இயக்கப்படும் தங்குமிடங்களை விரும்புகிறார்கள்” என்று தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறினார்.

எவ்வாறாயினும், சில தங்குமிடங்களில் இடவசதியில் சிக்கல் இருப்பதாகவும், மற்றவர்கள் கோவிட் காரணமாக இடமளிக்க மறுப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். “உள்ளூர் கடத்தல்காரர்கள் தங்குமிடங்களைச் சுற்றித் திரியும் நிகழ்வுகளும் பாதிக்கப்பட்டவர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன” என்று அந்த அதிகாரி கூறினார்.

கடத்தப்பட்ட பெண்கள் சிலரின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பாதுகாப்பு கோரி 4-5 மாதங்கள் இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். “உளவியல் ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

சில பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையில் ஒத்துழைக்க மறுப்பதால், தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்கள் 2-3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் எங்களின் உதவியை நாடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிஐடி உடனடியாக நடவடிக்கையெடுக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் காத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், ஆனால் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை, ”என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

சக்திவாய்ந்தவர்களின் பின்னணியில் இயங்கும் சில விபச்சார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது என்பதையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தினார். பிரமுகர்களின் ஈடுபாட்டின் காரணமாக நடவடிக்கையெடுக்க முடியாமல், இதுபோன்ற விபச்சார விடுதிகள் குறித்து அடிக்கடி எச்சரிக்கப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கையில் (TIP Report) இலங்கையில் மனித கடத்தல், தரமிறக்கப்படும் அபாயத்தை நாடு எதிர்நோக்கும் மட்டத்தில் உள்ளது.

TIP அறிக்கையில் தற்போது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள இலங்கை, மனித கடத்தலை எதிர்த்துப் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தரமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் நடக்கும் மனிதக்கடத்தல் விவகாரம் பற்றிய தகவல்களை அமெரிக்கா ஏற்கனவே கோரியுள்ளது

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் உள்ள நபர்களை கடத்துவதைக் கண்காணிக்கும் மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான அலுவலகத்தின் மூத்த அதிகாரியான காரி ஜான்ஸ்டோன், பிப்ரவரி 1, 2022 க்கு முன் இது தொடர்பான தகவலைக் கோரியுள்ளார்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மேலும் திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

Leave a Comment