நாகை மீனவரின் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்!

Date:

நாகையில், நாட்டுப் படகு மீனவர் ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி முகத்தில் இருந்து இன்று மீன் பிடித்து கரைக்கு மீனவர்கள் திரும்பிய பொழுது ஒரு நாட்டுப் படகு மீனவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. தலை அச்சு அசல் முதலை போலவும், உடல் முதலையின் கடினமான தோல் போலவும் இருந்துள்ளது.

இதனை சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர், இது மீன் இல்லை என விமர்சனமும் செய்துள்ளனர்.

3 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டிருந்தது. கரைக்கு கொண்டு வந்து வலையில் இருந்து எடுக்கும்போது மீன் உயிரோடு இருந்ததாகவும் பதப்படுத்துவதற்காக, ஐசில் வைத்தபோது இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

ஒருவழியாக இந்த முதலை மீனை சமைத்தவுடன் ருசியை அறியலாம் என ஒருவர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்