பங்களாதேஷ் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலப்பட்டியலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடா தமிழ் வீரர் ஒருவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
8வது பங்களாதேஷ் பிரிமியர் லீக் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கிறது. இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகளிற்கான வீரர்களின் ஏலப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கனடாவை சேர்ந்த தமிழ் வீரரான காவியன் நரேசின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் மகனே காவியன் நரேஸ் ஆவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1