பிரதமரின் திருப்பதி விஜயத்திற்கான விமானம் தமிழருடையதா?

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவின் திருப்பதிக்கு வழிபாட்டிற்கு சென்று வந்த விமானம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியின் புபுது ஜயகொட இது தொடர்பான சில கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் கேள்வியெழுப்ப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உகாண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை கனநாதனே, பிரதமரின் பயணத்திற்கான பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் நண்பராகக் கருதப்படும் கனநாதன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருடன் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார்.

திருப்பதி பயணத்திற்காக பிரதமர் செலவழித்த தொகை தொடர்பில் விளக்கம் தேவை என முன்னிலை சோசலிசக் கட்சியின் புபுது ஜயகொட, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்