25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
கிழக்கு

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக 4 பேர் போராட்டம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியீட்டுள்ளனர்.

இதற்கமைய இன்று (28) ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் க‌ல்குடாத் தொகுதி அமைப்பாள‌ர் ச‌ல்மான் வ‌ஹாப் த‌லைமையில் 4 பேர் மட்டக்களப்பு ஓட்ட‌மாவ‌டியில் க‌வ‌ன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்ட‌த்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வடக்கு கிழக்கை இணைப்ப‌த‌ற்கு துணை போகும் முஸ்லிம் காங்கிர‌சின் துரோக‌த்த‌ன‌த்தை கண்டிக்கின்றோம் கிழக்கு தலைமைகளின் அனுமதியற்ற தீர்வுகளை ஏற்க மாட்டோம் வடக்கு கிழக்கினை இணைக்காதே போன்ற வாசகங்களுடன் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் வடகிழக்கு இணைவிற்கு எதிராக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் ஊடக மாநாடுகளும் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துப்ப‌ட்டு வ‌ருவதாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment