24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இந்தியா

‘இரண்டு பால் பாக்கெட்டுல பால் இருக்குது; இப்ப ஒன்னாச்சுது; கடவுளின் பரீட்சையால் சொல்வதெல்லாம் உண்மைக்கு போனோம்’: அன்னபூரணி அம்மா வாய் திறந்தார்!

என்னை சாதாரணமாக மனிதர்களால் உணர முடியாது. என்னை உணர முடியாதவர்கள்தான் விமர்சனம் செய்கிறார்கள். ஆன்மீக பணியாற்றத்தான் என்னையும் அரசுவையும் (கள்ளக்காதலன்) கடவுள் படைத்தார் என கூறியுள்ளார் திடீர் சாமியார் அன்னபூரணி.

கடந்த சில தினங்களாக அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் டுபாக்கூர் பெண் சாமியார் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இவர் கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற பின்னர், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், அவரது பழைய வீடியோக்களும், புதிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், திடீரென ஆதிபராசக்தியின் அவதாரம் தான் தான் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அன்னபூர்ணி தனியார் யூ டியூப் தளமான Behindwoods நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

“என்னையும் அரசுவையும் (கள்ளக்காதலன்) படைத்தது இந்த ஆன்மீக நிலைமையை உருவாக்கத்தான். என்னை யாரும் குட்டிச்சுவராக்க முடியாது. நான் பிறந்தது முதலே மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன். என்னை உணர்ந்த என் குழந்தைகளையும் கொண்டாட்டத்தின் உச்சத்தில்தான் வைத்துள்ளேன். என்னை யாராலும் கஷ்டப்படுத்த முடியாது. காவல்துறை என்னை தேடுகிறது என்பது வதந்தி.

நான் எதற்கு ஓடி மறைய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நான் தவறு செய்தால்தானே ஓடி மறைய வேண்டும். என்னை எது வழிநடத்துகிறதோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இங்குதானே இருக்கிறேன். காவல்துறைக்கு அழைப்பு விடுத்து என்னை பிடித்துக்கொடுங்கள்.

இதற்கு முன்பு எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. இந்த வதந்திகள் மூலம் பொதுமக்களின் மனதில் எந்தளவு அழுக்குகள் உள்ளது என்பது தெரிகிறது. இதனால், பொதுமக்களுக்காக இனி நிகழ்ச்சிகள் நடத்தப்போவதில்லை. என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்தப்போகிறேன். பொதுமக்களுக்கு நடத்துவதாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை நடத்தமாட்டேன்.

மூன்று வருடங்கள் நான் தலைமறைவாக வாழவில்லை. பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். நான் எந்த சாமியார் வேடமும் போடவில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆடம்பரமும், வசதியாகதான் நான் வளர்ந்தேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. இது மதங்களுக்கு அப்பாற்பட்டது. எந்த மதங்களையும் நான் இழிவுபடுத்தவில்லை. யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை. நான் எதற்காகவும் நடிக்கவில்லை. இது நடிப்பில்லை. எனக்கு பிடித்திருப்பதால் அலங்காரம் செய்துள்ளேன். காவியை கட்டிக்கொண்டு ருத்ராட்சம் அணிந்து வேடமிடுவது ஆன்மீகம் அல்ல. அது வேஷம்.” என கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment