25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இந்தியா

சொல்வதெல்லாம் பொய்: அன்னபூரணியின் நிகழ்ச்சிக்கு தடை… ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு!

சென்னையில் அடுத்தவர் கணவனை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கிய பெண் ஒருவரை பிடித்து, அருள்வாக்கு அம்மன் என்று கூறி மர்மகும்பல் ஒன்று புத்தாண்டு அன்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரது பஞ்சாயத்து வீடியோ வெளியானதால் செல்போன்களை சுவிட்ச் ஓப் செய்து விட்டு அம்மன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஜீ தொலைக்காட்சியில் நடந்து வந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில், பங்கேற்று தாலி கட்டிய கணவனை அம்போவென விட்டுவிட்டு, வேறொரு பெண்ணின் கணவன் தான் வேண்டும் என்று பட்டவர்த்தனமாக அபகரித்து சென்ற இந்த அல்டாப் அன்னபூரணி தான், மர்ம கும்பலால் உருவாக்கப்பட்டுள்ள திடீர் அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மன்!

கடந்த இரு மாதங்களாக முக நூலில் அருள் பாலித்து வரும் இந்த திடீர் அம்மனுக்கு நிலையான முகவரி எல்லாம் கிடையாது.

ஊருக்கு 10 பேருக்கு மஞ்சள் சட்டையை தைத்து கொடுத்து இவர் சொல்றது எல்லாம் அப்படியே நடக்குது என்று உருக்கமான குரலில் அள்ளி விட்டு வீடியோ பதிவிட்டுள்ளனர்

அம்மனின் திய்வ தரிசனத்துக்கு கட்டணம் இல்லை என்றும் முன்பதிவிற்கு கட்டணம் என்றும் கூறி செங்கல்பட்டில் உள்ள குறிப்பிட்ட திருமண மண்டபத்தில் கூட்டம் சேர்ப்பதை வாடிக்கையாக்கி உள்ளனர்

அங்கு தெய்வத்துக்கு நிகராக அல்டாப் அன்னபூரணியை சிம்மாசனத்தில் அமர வைத்து பூஜை செய்வது பின்னர் அவர் தான் சக்தி வாய்ந்த கடவுள் என்று கூறி அன்னபூரணியின் வீடியோவை முக நூலில் பதிவேற்றுவதையும் முழு நேர வேலையாக அந்த கும்பல் செய்து வந்துள்ளது

அந்தவகையில் முகவரி இல்லா இந்த மர்ம கும்பல் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டையொட்டி அனைவரது நோய்களையும் நீக்கும் வகையில் இந்த டுபாக்கூர் அம்மனின் திவ்யதரிசன பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

யார் இந்த அன்னபூரணி?

கடந்த 2014ம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் நடைபெறும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தனது இவர் பங்கு கொண்டார். இதில் அவர் அரசு என்ற நபருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வருவது தெரிந்தது. அந்த நிகழ்ச்சி முடிவில் தனது கணவரையும்,14 வயது பெண் குழந்தையும் பிரிந்து கள்ளக்காதலனான அரசு என்ற நபருடன் சென்றார். இதன் பின்னர் அவர் அரசுடன் ஈரோடு பகுதியில் சென்று வசித்து வந்துள்ளார். அதன்பின்னர் மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அன்னபூரணி தன்னுடைய கள்ளக் காதலனான அரசுவின் உருவ சிலையை வடித்து சிலகாலம் வழிபட்டு வந்துள்ளார் . இதனை தொடர்ந்து அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் என்ற தொண்டு நிறுவனத்தையும் அந்த பகுதியில் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னை “அன்னபூரணி அரசு அம்மனாக” மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டுப்பாக்கூர்

இந்நிலையில் அன்னபூரணி அரசு அம்மன் புத்தாண்டில் புது பொலிவுடன் அறிமுகமாக திட்டமிட்டிருந்தார். இதற்காக வருகின்ற புதுப் புத்தாண்டன்று “அம்மாவின் திவ்ய தரிசனம்” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட்ரோடு அருகே உள்ள வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘தாயின் பாதகமலங்களில் தஞ்சமடைவோம்’ என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள வீடியோவில் அன்னபூரணி அம்மன் கால் வைக்கும் இடம் முழுவதும், பெண் பக்தர்கள் அவர் ‘கால் கீழே மலர்களைத் தூவி மலர் பாதை’ அமைத்து வழி ஏற்படுத்துகின்றனர். மேலும் அன்னபூரணியை அரசு அம்மாவின் உருவம் பதித்த புகைப்படங்களும் நிறைய உள்ளது. ‘சரணம் சரணம் அம்மா, நீ வரணும் வரணும் அம்மா’ , ‘சித்தரின் உருவங்களில் சித்துக்கள் செய்பவளே சரணம்’ என்ற பாடலும் பின்னணியில் ஓலித்துக் கொண்டிருக்கிறது. சில பெண்கள் அவருக்கு சூலம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள்.

சில பெண்கள் அவரை வணங்கியபடி சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். ஆண் பக்தர்கள் கூட சிலர் அம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு பின்னாலிருந்து மயில் இறகில் காற்று விசிறி விடப்படுகிறது. அம்மாவிடம் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்லும் அனைத்து பக்தர்களும் அம்மாவின் திருவுருவப்படம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூரணிக்கும் அவரது காதல் வாழ்க்கைக்கும் லட்சுமிராமகிருஷ்ணன் பஞ்சாயத்து செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியானது

இதையடுத்து எந்த சமூக வலைதளத்தை பயன் படுத்தி அல்டாப் அன்னபூரணி, கடவுள் அவதாரமாய் உருவாக்கப் பட்டாரோ, அதே சமூக வலைதளத்தில் அன்னபூரணியை ஆன்மீக அன்பர்கள் வார்த்தைகளால் முறைவாசல் செய்தனர்

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன், நான் தான் கடவுள் என்று சொல்பவர்களை நம்புவது முட்டாள் தனம் என்றும் அன்னபூரணி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வீடியோக்களை பார்த்தால் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த பஞ்சாயத்து வீடியோ வெளியானதில் இருந்து ஏமாற்றத்துக்குள்ளான பக்தர்கள் பலரும் அன்னபூரணியை இயக்கும் மர்ம கும்பலின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், 4 செல்போன் எண்களையும் சுவிட்ச் ஓப் செய்து விட்டு இந்த போலி அவதார கும்பல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது. இந்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளனர்.

அம்மாவுக்கு தடை

இதற்கு முன்னதாகவும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலந்தாங்கள் பகுதியில் இந்த மாதம் 19ஆம் திகதி அன்னபூரணி அரசு அம்மாவின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக, அன்னபூரணி அம்மா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரோகித் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான புகாரை வருவாய் துறையினரிடம் பெற்று, பரிசீலனையை போலீசார் துவங்கியுள்ளனர்.

மேலும் புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு, அதுவும் செங்கல்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு நாங்கள் அனுமதி மறுத்துள்ளோம். ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய தொலைபேசி எண் கொடுத்து திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அவருக்கு தற்பொழுது தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம் . இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினரிடமும் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment