அரசாங்கம் பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளை ஒன்றாக கலந்து குழம்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கை எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் மோசமான பொருளாதார தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை சமரசப்படுத்தினால், நாட்டுக்கு சாதகமாக அமைய பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.