வவுனியாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக புத்தாடைக் கொள்வனவில் ஆர்வம் காட்டும் மக்கள்

Date:

உலகம் முழுவதும் மக்கள் இயேசு பிறப்பின் நாளாக கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தை நாளைய தினம் (25) கொண்டாட உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்களாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான கிறிஸ்து பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலிகளுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்