ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுவதை நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சியின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தாக்குதல் நடந்த போது கிறிஸ்தவ சமூகத்தின் பொறுமை மற்றும் ஒழுக்கத்தை பாராட்டினார்.
பல வருடங்களுக்கு முன்னர் ஈஸ்டர் தினத்தன்று துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களில் பலர் உயிர் இழந்ததாகவும் காயங்களுக்கு உள்ளானதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சோகம் ஏற்பட்ட போதிலும், கிறிஸ்தவ சமூகம் அமைதியாக பதிலளித்ததுடன், வன்முறையில் பதிலளிவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதில் எதிர்க்கட்சி கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.