சீனாவின் சி ஆன் நகரில் கொரோனா பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தவறிய அதிகாரிகள் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றின் ஆரம்ப கட்டத்தில், தொற்றாளர்களை அள்ளிச் சென்று பூட்டி வைத்தது சீனா.
பின்னர் தொற்று கட்டுக்குள் வந்திருந்தாலும், அண்மை வாரங்களில் அங்கு மீண்டும் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சி ஆன்னில் கடுமையான முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனைகள் நடத்தப்படும் விதத்தில் குறைபாடுகள் இருந்ததாகவும், ஒருங்கிணைப்பில் ஒற்றுமை இல்லாததுமே தொடர்புத் தடங்களைக் கண்டறிவதில் தடைகளாய் இருந்ததாகக் கூறப்பட்டது.
அதனால் அந்நகரைச் சேர்ந்த 26 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று புதிதாக 49 பேருக்குக் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தங்கள் வட்டாரங்களில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தத் தவறும் சீன அதிகாரிகள் கண்டிக்கப்படுவதும் பணிநீக்கம் செய்யப்படுவதும் வழக்கம்.