கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.
இலங்கையில் COVID-19 தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,832 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று, 14 ஆண்களும், 7 பெண்களும் மரணித்தனர்.
11 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
மரணித்த 7 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.




